2011 உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் சான்ஸ்!

Posted January 06, 2015 by Adiraivanavil in Labels:
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் தொடர்பாக இன்று மும்பையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பி.சி.சி.ஐ.,
தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவினர், வீரர்கள்  பட்டியல் குறித்து ஆலாசனை நடத்தினர்.
இந்த கூட்டத்திற்கு பின் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கடந்த உலக கோப்பை வெற்றிக்கு முக்கிய  காரணமாக இருந்த யுவராஜ் சிங், இடம்பெறவில்லை. இதேபோல் ஷோவாக், ஜாகீர்கான், உள்ளிட்ட மூத்த வீரர்களும் இடம்பெறவில்லை.
15 பேர் கொண்ட பட்டியல் விபரம் வருமாறு: தோனி (கேப்டன்), கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ராயுடு, ராகானே, ஷீகர் தவான், அஸ்வின், ரவீந்தர் ஜடேஜா, அக்ஸார் படேல், புவனேஸ்குமார், இஷாந்த சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி,


0 comment(s) to... “2011 உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் சான்ஸ்!”