புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாடுவோம்....

Posted January 08, 2015 by Adiraivanavil in Labels:

போகிப்பண்டிகை - பழையன கழிதலும் புதியன புகுதலும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் இது தான் போகிப்பண்டிகை என்று அனைவரும் சொல்லும் வாசகம். கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் சந்தோசம் தான் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய விரிப்பு, பெட்சீட், தலையானை மற்றும் இதர பொருட்களை

தீ இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நான் சிறியவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்கள் எல்லாம் கும்மியடித்து, கும்மிப்பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்வர். இப்ப எல்லாம் அதைப்பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு.
இப்பண்டிகை எப்பவுமே தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.
மார்கழி மாதத்தின் கடைசி நாளை துன்பங்களைத் துடைக்கும் நாளாக போகிப்பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம். துன்பம், வறுமை, மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கலைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பண்டிகை இது பண்டைய நாட்களில் மழையைக் கொடுத்து பயிர்களை செழிக்க வைக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர விழாவாக போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சொர்க்க போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என கூறியதை கேள்விப்பட்டது உண்டு.
போகிப்பண்டினை அன்று கிராமங்களில் அனைத்து வீட்டிலும் காப்பு கட்டுவார்கள், காப்பு கட்டுவது என்பது அந்த ஆண்டின் இறுதி நாளை கழிவடை நாளாக கருதி அந்த நாளோடு அனைத்து கெட்டவைகளும் அழியட்டும் என்று காப்பு கட்டுவர். வேப்பந்தலை, ஆவாரம் பூ, பூலப் பூ இது மூன்றையும் சேர்த்து கட்டு வைப்பதற்கு காப்பு கட்டு என்று பெயர்.
இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்....


0 comment(s) to... “புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாடுவோம்....”