சவுதி மன்னர் அப்துல்லா பின் அஜீஸ் மரணம் - புதிய மன்னராகிறார் இளவரசர் சல்மான்

Posted January 23, 2015 by Adiraivanavil in Labels:

சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நல குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.  அவருக்கு வயது 90. அவரது மரணத்தை அடுத்து, இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் புதிய மன்னதாக
பதவியேற்க உள்ளார்.

கடந்த 2005 ல் மன்னராக பொறுப்பேற்ற அப்துல்லா,  கடந்த பல வாரங்களாக அவர், நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை சவூதி நேரப்படி ஒரு மணியளவில் காலமானார் என அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல்அஜிஸ் ( வயது 79 ) முடி சூட்டப்படுவார் என்றும்  புதிய இளவரசராக சல்மானின் சகோதரர் முக்ரின் பொறுப்பேற்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


0 comment(s) to... “சவுதி மன்னர் அப்துல்லா பின் அஜீஸ் மரணம் - புதிய மன்னராகிறார் இளவரசர் சல்மான்”