அதிரை அருகே அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், விளையாட்டு போட்டி

Posted January 19, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ளஅண்ணா பல்கலைக்கழக  கல்லூரி, ராஜாமடம் பட்டுக்கோட்டை வளாகத்தில் தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழாவினை  மாணவ, மாணவிகள்; பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி தமிழர் மரபு சார்ந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ
மாணவியர்களுக்கு புலமுதல்வர் முனைவர்.   திரு.கோ.இளங்கோவன் மற்றும் பேராசிரியர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.  விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் குயின்ட்டன் அவர்கள் ஏற்பாடு செய்தார்.


0 comment(s) to... “அதிரை அருகே அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், விளையாட்டு போட்டி”