முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை வகித்தார். எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதனை முன்னிட்டு எடையூர் காவல் நிலையத்திலிருந்து மாணவ, மாணவிகளின் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு முக்கிய வழியாக சங்கேந்தி கடைத்தெரு சென்று மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ஞானபண்டிதர், உதவி தலைமை
ஆசிரியை இந்திரா, ஆசிரியர் ஞானசேகரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை