பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு பிப்-2 ந்தேதி ஹால் டிக்கட்
Posted January 31, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் வரும் பிப்ரவரி மாதம் 2 ந்தேதி முதல் ஹால் டிக்கட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத்தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு.,
வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில்
ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்ததனித்தேர்வர்கள் பிப்ரவரி 2 ந்தேதி முதல் 4 ந்தேதி வரை வரை இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www. tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று higher secondary exam march 2015 –என்ற வாசகத்தினை private candidate hall ticket print out செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு ய்தால்,அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comment(s) to... “பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு பிப்-2 ந்தேதி ஹால் டிக்கட்”