அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கார், டாக்சி ஸ்டாண்ட் அகற்றம்

Posted January 23, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பல வருடங்களாக கார், டாக்சி,ஸ்டாண்ட் இல்லாததால் பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளேயே வாடகை கார்கள், வேன் உள்ளிட்டவைகள் பயன்படுத்தி நிறுத்தி வைத்தனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்து செல்ல இடம் போததால் ரோட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தனர். 
    இதனால் அதிராhம்பட்டினம் பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் இருந்து வந்தன. இதையடுத்து மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின்படி டாக்சி ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்ற உத்திரவு வந்தன. 
   இதனால் நேற்று (22ந்)தேதி காலை காவல் துறை ஏ.எஸ்.பி.அரவிந்த்மேனன், பட்டுக்கோடடை துணை ஆட்சியர் ராஜசேகரன், தாசில்தார் சேதுராமன் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலிசார்; முன்னிலையில் கார் டாக்சி வேன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 
 சாலை ஓரம் அமைக்கப்பட்டு, இருந்த சிறு, சிறு கடைகள் அப்புறப்பத்தப்பட்டன. மேலும், பொக்லைன் உதவிக்கொண்டு பேருந்து வளாகத்திற்குள்ளே இருந்த மிகப்பெரிய பள்ளம் மூடப்பட்டன. அனைத்து பேருந்துகளும் உள்ளே வந்து செல்கின்றன.





0 comment(s) to... “அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கார், டாக்சி ஸ்டாண்ட் அகற்றம்”