அதிரை மாணவி தற்கொலை-ஆசிரியர்,மாணவி மீது வழக்குப்பதிவு-கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

Posted January 27, 2016 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட் டி னம், ஜன.27-
அதிராம்பட்டினம் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர் மற்றும் ஒரு சீனியர் மாணவி மீது போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி முகவர். இவரது மகள் சுலோச்சனா(19). அதிராம்பட்டினத்தில் உள்ள தனி யார் கல்லூரி ஒன்றில் பி.ஏ(தமிழ்) முதலா மாண்டு படித்து வந்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு 2 தினங்களுக்கு முன் என் சிசி பயிற்சி நடை பெற்று வந்தது. சுலோச் ச னா வும் கலந்து கொண் டார்.
நேற்று கல் லூ ரி யில் குடி யரசு தின விழா நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சில மாணவிகள் ஓடி வந்து, ‘மேடம், அங்கே ஒரு மாணவி தூக் குல தொங் குறா...’ என்று அலறி அழு த படி கூறினர். விழாவில் இருந்த பேராசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். சில பேராசிரியைகள் ஓடிப்போய் பார்த்தனர்.
கல்லூரி பேராசிரியைகளின் ஓய்வறையில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கு வதுதெரிந்தது. அங்கு மின்விசிறியில் துப்பட்டா வால் தூக்கிட்டு அந்த மாணவி தொங்கி கொண்டிருந்தார். அந்த மாணவி சுலோச்சனா என்று தெரியவந் தது.
அதிர்ச்சியடைந்து மாணவியின் தந்தைக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஏஎஸ்பி அரவிந்த் மேனன், தாசில்தார் சேது ரா மன் மற் றும் போலீசார் வந்து விசாரித்தனர். பின் னர், மாண வி யின் உடலை பிரேத பரி சோதனைக்காக பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து சுலோச்சனாவின் தந்தை சங்கர் கூறும் போது, ‘எனது மகள் குடியரசு தின விழாவையொட்டி 2 தினங்களுக்கு முன் என்.சி.சி பயிற்சிக்கு சென்றார். அப்போது, என்.சி.சி. சீனி யர் மாணவி, எனது மகளை அடித்துள்ளார். கல்லூரிக்கு வந்து இது பற்றி பேராசிரியர்களிடம் புகார் செய்யுங்கள், இல்லை யென்றால் நான் கல்லூரிக்கு போக மாட்டேன் என்று என்னிடம் கூறினாள். இதற்கிடையே நேற்று கல்லூரியில் இருந்து எனது மகள் இறந்து விட்டாள் என்று தகவல் வந்தது. அங்கு சென்று பார்க்கும் போது எனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். எனது மகள் இறப்பில் மர்மம் உள்ளது’ என்று கூறினார். இது கு றித்து அதி ராம் பட் டி னம்
காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார். மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால்தான் சடலத்தை பெற் றுக்கொள் வோம் என பெற்றோரும் ஊர்மக்களும் கூறினர். அதிகாரிகள் அவர் களை சமாதானம் செய்தனர். 2 மணி நேரபேச்சு வார்த்தைக்கு பிறகு சடலத்தை பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக கல்லூரி என்.சி.சி. ஆசிரியர் கணபதி, சுலோச்சனாவை அடித்த தாக கூறப்படும் மாணவி கலா ஆகிேயாரிடம் போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இவர்கள் மீது சுலோச்சனாவை தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப் ப திவு செய் துள் ள னர்.
இவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள், சமுதாய அமைப்புகள் போராட்டமும் நடத்த முடிவு செய் துள் ள னர்.
மாணவி தற்கொலையை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடு முறைவிடப்பட்டது.
விழுப் பு ரம் மாவட் டம் சின் ன சே லம் அருகே சித்த மருத் துவ கல் லூ ரி யில் 3 மாண வி கள் தற் கொலை செய்து கொண் டதை தொடர்ந்து கல் லூரி முதல் வர் மற் றும் நிர் வா கி கள் கைது செய் யப் பட் ட னர் என் பது குறிப் பி டத் தக் கது.
நன்றி தமிழ் முரசு 


0 comment(s) to... “அதிரை மாணவி தற்கொலை-ஆசிரியர்,மாணவி மீது வழக்குப்பதிவு-கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு”