24 தலைமை அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு கவுண்டர்கள் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

Posted January 31, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பிப்ரவரி மாதம் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும் மாதமாக அணுசரிக்கப்படும். இதுவரை மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சலகங்களில் 2.9 லட்சம் கணக்குகள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் முழுவதும் மத்திய மண்டலத்தில் உள்ள 24 தலைமை அஞ்சலங்களிலும் செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். தகுதியுடைய அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வங்கிகள், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தகுதியுடைய பெண் குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் அவர்களது அலுவலக வளாகத்திலேயே செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புவோர் அருகே உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


0 comment(s) to... “24 தலைமை அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு கவுண்டர்கள் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்”