'ஐ' படத்தில் வரும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் -படங்கள்இணைப்பு
Posted January 21, 2015 by Adiraivanavil in Labels: சுற்றுலா
ஜோத்பூர்: விக்ரம் லிங்கேஸ்வரனாக இருந்து மாடல் 'லீ' ஆக மாறிய பிறகு விளம்பர படங்களில் நடிப்பதாக கதை நகரும். அப்படி அவரும் எமி ஜாக்சனும் நடிக்கும் ஜீன்ஸ் விளம்பரம் ஒன்று நீல நிறமாக காட்சி தரும் இடம் ஒன்றில் படமாக்கப்பட்டிருக்கும். 'நீல நகரம்' என்று அழைக்கப்படும் அந்த நகரம் ராஜஸ்தானில் இருக்கும் புராதன நகரமான ஜோத்பூர் ஆகும்.
ஜோத்பூர்: இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா மாநிலமான ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான ஜோத்பூரில் பழமையான பெரிய கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள் மற்றும் தகிக்கும் தார் பாலைவனம் போன்றவை வருடம் முழுக்கவும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை.
ஜோத்பூர்: மெஹ்ரங்கர்க் கோட்டை: ஜோத்புரின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்வது மெஹ்ரங்கர்க் கோட்டை ஆகும். இந்தியாவில் இருக்கும் மிக பழமையான கோட்டைகளுள் ஒன்றான இது 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. ஏழு பெரும் வாயில்களை உடைய இதனுள் அருங்காட்சியகம் ஒன்றும் செயல்படுகிறது.
ஜோத்பூர்: உமைத் பவான் அரண்மனை: உலகின் மிகப்பெரிய தனியார் வசிப்பிடங்களில் ஒன்றான இந்த அரண்மனை ஜோத்பூர் ராஜ வம்சத்தினரின் வசிப்பிடமாக திகழ்கிறது. 347 அறைகள் கொண்ட இந்த அரண்மனையை காலை 9 மணி முதல் 5 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். ராஜ பரம்பரையினரின் ஆடம்பர வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த உமைத் பவான் அரண்மனைக்கு வர வேண்டும்.
ஜோத்பூர்: இவை தவிர கன்தா கர் என்ற மணிக்கூண்டு, கயலான ஏரி, சாஸ்த்ரி சர்கிள் போன்ற இடங்களும் இங்குள்ள குறிப்பிடத் தகுந்த சுற்றுலாத்தலங்கலாகும். ஐ படம் மட்டும் இல்லாது கிறிஸ்டோபர் நோலனின் புகழ்பெற்ற பேட்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளும் இந்த நீல நகரத்தில் படமாக்கப்பட்டுள்ளன
0 comment(s) to... “'ஐ' படத்தில் வரும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் -படங்கள்இணைப்பு ”