அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் பொதுமக்கள்.ஆர்ப்பாட்டம்-கடைகள் அடைப்பு

Posted January 20, 2017 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம்.ஜன.20
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  மாணவர்கள் பொதுமக்கள் சிறுவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தி.மு.. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர்கள் கூட்டமைப்பு வர்த்தக தொழில் சங்கங்களின் பேரமைப்பு. கார். வேன்உரிமையாளர்கள். ஒட்டுனர்கள் சங்கம். பெரிய மார்க்கெட். சின்ன மார்க்கெட் வியாபாரிகள் மாணவ பெற்றோரகள்; உள்ளிட்டோர் ஆதரவு அளித்தன. அனைவரும் பேருந்து நிலையத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள். மற்றும் திமுக நகர செயலாளர் இராமகுணசேகரன். தில்லைநாதன். மரைக்கா இத்ரிஸ் அகமது. புருஷேத்தமன் ஆகியோர்   கலந்துகொண்டு தங்களது ஆதரவைதெரிவித்ததுடன் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வரை போராடுவோம் என கோஷமிட்டனர். இதைபோல் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கிராமங்களிலும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைக்க பட்டது



















0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் பொதுமக்கள்.ஆர்ப்பாட்டம்-கடைகள் அடைப்பு”