அதிராம்பட்டினத்தில் சிக்கித்தவித்த 2 ஆஸ்திரேலியஆந்தைகள் மீட்பு
Posted January 23, 2017 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினத்தில் ஒரு கட்டிடத்தில்சிக்கித்தவித்த 2 ஆஸ்திரேலிய ஆந்தைகள்மீட்கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பட்டுக்கோட்டைமெயின் ரோட்டில் லாவண்யாதிருமணமண்டபம்அமைந்துள்ளது.இந்த மண்டபத்தின்உரிமையாளர் அகமது நேற்று காலை மண்டபத்தில் உள்ளஅலுவலகத்துக்குச் சென்றபோது அங்கு இரண்டு ஆஸ்திரேலியஆந்தைகள் இருப்பதைக்கண்டார். மேலும் அந்த ஆந்தைகள்வெளியில் செல்லமுடியாமல் சிக்கித் தவித்ததைக்கண்ட சமூகஆர்வலர்கள் மரைக்கா இத்ரிஷ் அகமது மற்றும் சாகுல் அவைகளை மீட்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல்கொடுத்தார்.இதையடுத்து வனத்துறையினர் அவற்றை கைப்பற்றிவேதாரண்யம் காட்டுப்பகுதியில் விடுவதற்காககொண்டுசென்றனர்.இதுபற்றி வன ஆர்வலர்கள் கூறுகையில்அதிராம்பட்டினம் பகுதி அலையாத்திக்காடுகள் உள்ளபகுதியாகும்.இந்த அலையாத்திக்காடுகளுக்கு வருடம்தோரும்நவம்பர் மாதம் முதல் வெளிநாட்டுப்பறவைகள் வரத்துவங்கும்பின்னர் கோடைகாலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் அதிகமாகஆரம்பித்தவுடன் மீண்டும் சென்றுவிடும் இந்நிலையில் தற்போதுகுளிர்காலமாக உள்ளதால் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, மலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளைச்சேர்ந்த பறவைகள் நம்அலையாத்திக்காட்டுப்பகுதிக்குள் உள்ளன.எனவேஅலையாத்திக்காடுகளை பராமரிக்கவும் காடுகள் அழியாமல்இருக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்என்கின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் சிக்கித்தவித்த 2 ஆஸ்திரேலியஆந்தைகள் மீட்பு”