முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாந்தி
Posted January 25, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த மேலதொண்டியக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்ட பல குழந்தைகள், மாலையில் வீட்டுக்கு சென்றவுடன் வாந்தி எடுத்துள்ளனர். ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது.இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளான
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பழனிச்சாமி கூறியதாவது: மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்ற குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டவுடன் அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித் தோம். தற்போது சிகிச்சை பெற்று அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாந்தி”

