அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஏரோமாடலிங் கிளப் முதலாமாண்டு நிறைவு விழா - படங்கள் இணைப்பு
Posted January 14, 2015 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
அதிராம்பட்டினம் அருகில் புதுக்கோட்டை உள்ளுரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ
பள்ளியில் ஏரோமாடலிங் கிளப் முதலாமாண்டு நிறைவுவிழா நடைபெற்றது இவ்விழாவில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குட்டி விமானத்தை இயக்கி காட்டினார் இதன் பயிற்ச்சியாளர் இதை ஆர்வமுடன் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நேவி காமாண்டர் மனீஷ் அகர்வால் மற்றும் காதிர்முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் கணபதி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள் இதனையடுத்து பட்டுக்கோட்டை ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக பிரியண்ட் சிபிஎஸஇ பள்ளி சார்பாக குட்டி விமானத்தை பறக்க விட்டு அதுபற்றி விளக்கமும் அளித்தனர் மேலும் நமது பகுதிக்கு ஏரோமாடலிங் கிளப் அறிமுகம் செய்த பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்தினருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டினர் இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், மேலாளர் சுப்பையன் மற்றும் முதல்வர் ஈஸ்வரன் செய்திருந்தனர்.
.
0 comment(s) to... “அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஏரோமாடலிங் கிளப் முதலாமாண்டு நிறைவு விழா - படங்கள் இணைப்பு”