பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் தேர்வு

Posted November 25, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தல் வி.பி.எஸ். திருமண மண்டபத்தில் நேற்று நடந் தது. ஏனாதிபாலசுப்பிரமணியன் மகன் ராமனாதன், ஆலடிக்குமுளை ஊராட்சி மன்றத் தலைவர் பழனி வேலு, மாளியக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். ராமனாதன் 39 வாக்குகளும், பழனிவேலு
31 வாக்குகளும், ரமேஷ் 13 வாக்குகளும் பெற்றனர். 8 வாக்குகள் வித்தியாசத்தில் ராமனாதன் வெற்றி பெற்றார்.
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தல் நாட்டுச்சாலை எம்.என்.ஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தாமரங்கோட்டை பார்த்திபன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வேதரெத்தினம், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
பார்த்திபன் 25 வாக்குகளும், வேதரெத்தினம் 22 வாக்குகளும், முருகப்பன் 21 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவை. இதில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் பார்த்திபன் வெற்றி பெற்றார்.
மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர் தேர்தல் காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கில் நேற்று நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் சொக்கனாவூர் இளங்கோ, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இளங்கோ 61 வாக்குகளும், கோவிந்தராஜ் 50 வாக்குகளும் பெற்றனர். 4 வாக்குகள் செல்லாதவை. 11 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோ வெற்றி பெற்றார்.நன்றி தமிழ் முரசு 


0 comment(s) to... “பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் தேர்வு”