கூட்டமாக சிறகடிக்கும் பல வண்ண பட்டாம்பூச்சிகள்சுற்றுலா பயணிகள் குதூகலம்
Posted November 21, 2014 by Adiraivanavil in Labels: சுற்றுலாகொள்கின்றன.நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, கருமந்தி உள்ளிட்ட விலங்குகளும் வவ்வால், பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட பூச்சியினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையால் பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை துளிர்விட்டுள்ளது. காட்டுச் செடிகளில் பலவித மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதில் இருக்கும் தேனை நுகர்வதற்காக நூற்றுக்கணக்கில் பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து பறக்கின்றன. தேன் மட்டுமின்றி தரையில் படிந்திருக்கும் தாது உப்புகளை உறிஞ்சவும் இவை கூட்டமாக பறக்கும் போது அந்த பகுதி முழுவதும் வானவில்லின் வண்ணம் போல் ஜொலிக்கிறது.
வண்ணத்துப் பூச்சிகளின் உடல், வடிவம், வண்ணம் ஆகியவற்றை இவை எந்த வகையை சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டன.
இறக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதியில் இருக்கும் கலர் குறியீடுகளால் அவை வேறுபடுகின்றன. மஞ்சள் நிறமுள் ளவை காமன் பிராஸ் எல்லோ, பச்சை நிறமுள்ளவை க்ரீன் காமன் பிராஸ் எனிரன்ட் என்று அழைக்கப்படுகிறது.
இதேபோல் காமன் ரோஸ், க்ரீம்ரோஸ் உள்ளிட்ட பல வகையான வண்ணத்து பூச்சிகள் இங்கு உலா வருகின்றன. இவற்றை பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் குதூகலமடைந்து அருகில் தாவிச்சென்று அவற்றை பிடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவை சிக்காமல் பறந்து விடுகின்றன.
சுற்றுலா பயணிகள் குதூகலம்
பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் பல வண்ணங்களில் கூட்டம் கூட்டமாக சிறகடித்து பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்.
பாபநாசம் மலையில் பகலிலும் பனி மூட்டம் நிலவுவதால் குளிரில் நடுங்கும் குரங்குகள். நன்றி தினகரன்
0 comment(s) to... “கூட்டமாக சிறகடிக்கும் பல வண்ண பட்டாம்பூச்சிகள்சுற்றுலா பயணிகள் குதூகலம்”