
முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் நேற்று மதியம் லாரியில் இருந்து அப்பகுதிகளுக்கு வந்த பொருட்களை லோடுமேன் ராஜாராமன் என்பவர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணலி கிராமம் ரமேஷ்(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் லோடுமேன் ராஜாராம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். இது குறித்து முத்துப்பேட்டை எஸ்ஐ வெர்ஜினியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி தினகரன்