அதிரை அருகே 3 ஆண்டுகளுக்குப்பின் கொட்டித் தீர்த்தது மழை
Posted November 15, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஒரு பங்கு கூட செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இதனால் ஏரி, குளங்கள் முழுமையாக வறண்டு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ள சேதம் ஏற்பட்ட நிலையிலும், இப்பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் ஏரி பாசன நிலங்கள் தரிசாகவே கிடந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் விடியும் வரை இப்பகுதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் அம்புலியாறு, அக்னிஆறு மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் பெருகி 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய நாடியம், ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், கொரட்டூர் போன்ற பெரிய ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால் ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சிநன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகே 3 ஆண்டுகளுக்குப்பின் கொட்டித் தீர்த்தது மழை”