முத்துப்பேட்டையில் மாடு மீது மோதிய பைக்கில் இருந்து விழுந்த அண்ணன், தங்கை காயம்

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டையில் மாடு மீது மோதி பைக்கில் இருந்து விழுந்த அண்ணன், தங்கை காயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேலவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகள் சுபா(11). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு தனது சகோதரர் ராஜ்பரத்(25) உடன் பைக்கில் புறப்பட்டார். முத்துப்பேட்டை வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும்போது தம்பிக்கோட்டை கீழக்காடு அருகே மாடு ஒன்று குறுக்கே சென்றது. அப்போது மாடு மீது மோதி நிலை தடுமாறி பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். இதில் சுபாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சகோதரர் ராஜ்பரத் லேசான காயத்துடன் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ராமானுஜம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.நன்றி தினகரன் ய 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் மாடு மீது மோதிய பைக்கில் இருந்து விழுந்த அண்ணன், தங்கை காயம்”