பஹ்ரைனில் மாணவியை மானபங்கம் செய்த இந்தியருக்கு 3 ஆண்டு சிறை.!

Posted November 28, 2014 by Adiraivanavil in Labels:
வளைகுடா நாடான பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா அருகே கிழக்கு ரபா நகர் உள்ளது. அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு 11 வயது பள்ளி மாணவி ஒருவர் சென்றிருந்தார். 

அப்போது அந்த உணவு விடுதியில் வேலை செய்து வந்த 31 வயது இந்திய ஊழியர் அந்த மாணவியை கன்னத்தில் முத்தமிட்டு மானபங்கம் செய்து விட்டார்.

இது தொடர்பாக மாணவியின் புகாரின் பேரில், மனாமாவில் உள்ள உயர் கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட மாணவி, நடந்தது என்ன என்பது குறித்து கோர்ட்டில் தெளிவான சாட்சியம் அளித்தார்.

விசாரணை முடிவில், இந்திய ஊழியர் மீதான மானபங்க குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.


0 comment(s) to... “பஹ்ரைனில் மாணவியை மானபங்கம் செய்த இந்தியருக்கு 3 ஆண்டு சிறை.!”