பட்டுக்கோட்டையில் பூட்டை உடைத்து டெய்லர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
Posted November 24, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை, : பட்டுக்கோட்டையில் டெய்லர் வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு நாடியம்பாள்புரம் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (42) டெய்லர். இவர் கடந்த 21ம்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் செயின் என 3 பவுன் செயின் களை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல்
நிலைய போலீசார் வழக்குப் பதிந்து செயின் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்
நன்றி தினகரன் .
0 comment(s) to... “ பட்டுக்கோட்டையில் பூட்டை உடைத்து டெய்லர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு”