முத்துப்பேட்டையில் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்ப தமுமுக முடிவு

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டையில் தமுமுக ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நெய்னா முகமது முன்னிலை வகித்தார். இதில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவது.
இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தை மீட்க கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முத்துப்பேட்டையில் இருந்து 250க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து வரும் டிசம்பர் 2ம் தேதி முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் முகமது அலீம், மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது பைசல், நகர செயலாளர் சீமான், நகர துணை தலைவர் யாசீன், பொருளாளர் தாவுதுஷா, துணை செயலாளர் நிசார், மருத்துவ அணிசெயலாளர் முகமது நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “ முத்துப்பேட்டையில் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்ப தமுமுக முடிவு”