முத்துப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி காயம்

Posted November 20, 2014 by Adiraivanavil in Labels:

 முத்துப்பேட்டை அடுத்த அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(34). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தில்லைவிளாகம் அய்யனார் கோவில் அருகே பைக்கில் வந்து கொண்டு இருந்தார். அப்போது தில்லைவிளாகம் கீழக்கரையை சேர்ந்த வெங்கட்ராமன் ஓட்டி வந்த கார், பழனிவேல் பைக் மீது மோதியது. இதில் பழனிவேலுக்கு
கால்கள் முறிந்தது. உடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி காயம்”