
முத்துப்பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் காஸ்ட்ரோ. இவரது மகள் யூனின் இமாக்கு லேட்(29). இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ராஜேந்திரன் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார். இந்நிலையில்
குழந்தையுடன் யூனின் இமாக்குலேட் மாயமானதை அறி ந்து அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா வழக்கு பதிந்து யூனின் இமாக்குலேட்டையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.
நன்றி தமிழ்முரசு