பட்டுக்கோட்டையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு

Posted November 18, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை திருடிச்
சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே கல்விராயன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி மலர்க்கொடி (45). இவர் திங்கள்கிழமை காலை
உறவினர்கள் சிலருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பட்டுக்கோட்டை அருகிலுள்ள பொன்னவராயன்கோட்டை கிராமத்துக்குச் சென்றார். பிற்பகல் அங்கிருந்து ஊர் திரும்புவதற்காக மலர்க்கொடியும், அவரது உறவினர்களும் தனியார் நகரப் பேருந்தில் வந்து பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினர். அப்போது மலர்க்கொடி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினமணி 


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு”