டெங்கு காய்ச்சலா? ஆட்டுப்பால் குடிங்க !

Posted November 15, 2014 by Adiraivanavil in Labels:


ஆட்டுப்பால் மருத்துவ குணம் உடையதாக இருப்பதால், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என சோதனை முயற்சியாக டெல்லி மக்களால் அறியப்பட்டுள்ளது.
  
டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் பருவ மழையின் காரணமாக கழிவு நீர் தேங்கி, கொசுக்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக டெல்லியின் கிழக்கு பகுதிகள் டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், மருத்துவ குணம் கொண்ட ஆட்டுப்பால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதாக டெல்லி மக்கள் கூறுகின்றனர்.

இத்தகவலால், ஆட்டுப்பாலின் விலை தாறுமாறாக ஏறி, இப்போது 100 மி.லிட்டர் பால் 400 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.  இது தொடர்பாக திரிலோக்புரியில் அமைந்திருக்கும் சிறுபான்மையினர் மேம்பாட்டு மையத்தின் தன்னார்வலராக பணியாற்றும் சாந்தினி தெரிவிக்கையில், ‘ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது.

எனவே, இப்பாலை அருந்தும் போது டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும்.

மேலும், பப்பாளி இலையையும் சாறு எடுத்து சாப்பிடுவது டெங்கு காய்ச்சலைக்  குணமாக்கும்‘ என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், மயூர் விகார், கணேஷ் நகர், லெட்சுமி நகர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டுப்பாலை வாங்கி செல்வதாக தெரிவித்தார்.

மருத்துவக் குணங்கள்:
1. காடுகள், மலைகள், மலைச்சாரல்கள், ஆற்றங்கரைகள் என பலவகை மூலிகைச் செடிகள் நிறைந்த புதர்ப்பகுதிகள் போன்ற இடங்களில் பலவித செடிகொடிகளையும், மூலிகைகளையும் மேய்ந்து வருகின்ற வெள்ளாடுகளின் பாலை பூலோக தேவாமிர்தம் எனக் கூறலாம்.

2.வெள்ளாட்டின் பாலை வயதிற்கு ஏற்ப 5 மி.லி. முதல் 100 மி.லி. வரை சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சிப் பருகி வர எத்தகைய நோய், வலி வியாதிகளை உடையவர்களுக்கும் சிறந்த பலன் கிடைக்கும்.

3. வெள்ளாட்டுப் பாலை கறந்த உடனேயே அருந்தக்கூடிய வசதியுடையவர்கள் சம அளவு தண்ணீர் மட்டும் கலந்து காய்ச்சாமலேயே அருந்திட மேலும் மிகுதியான பலனைப் பெறலாம்.

4.வெள்ளாட்டுப் பால் வலிப்பு, புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை போன்ற எவ்வித கொடூர நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆண்மைக்குறைவு, உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3 – 4 மாதங்கள் தினசரி ஒரு வேளை குடித்து வர நல்ல பலன் தெரியும்.

5.வெள்ளாட்டுப் பாலினால் வாத, பித்த, கப தொந்தரவுகளினால் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்குவதுடன் சுவாச காசம், சீதாதி சாரம், கபத்தோடம், விரணம், வாதத்தினால் உண்டாக்கிய வீக்கங்கள் முதலிய துன்பங்களைத் தீர்ப்பதுடன் பசியையும் உண்டாக்கும்.

6.இப்பாலை மஞ்சள்காமாலை நோய் உடையவர்களுக்குத் தினமும் கொடுக்க விரைவில் குணமடையும்.


0 comment(s) to... “டெங்கு காய்ச்சலா? ஆட்டுப்பால் குடிங்க !”