பட்டுக்கோட்டையில் 203 பேருக்கு இலவச கண் பரிசோதனை
Posted November 17, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அய்யா குழுமத்தின் நிறுவனர் வி. அய்யாக்கண்ணு வேளாளர் நினைவாக பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்
, கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.என். ராமச்சந்திரன் முகாமைத் தொடக்கி வைத்தார். இதில் 203 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 25 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.ஜெ. சம்பத் தலைமை வகித்தார். செயலர் ஏ.எஸ். வீரப்பன், முன்னாள் தலைவர்கள் வி. பாலசுப்பிரமணியன், ஆர்.கே.பி. சந்திரசேகரன், கே. விவேகானந்தன், ஆர். ஜயவீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர். அண்ணாதுரை வரவேற்றார். வி. மதனசேகரன் நன்றி கூறினார்.நன்றி தினமணி
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் 203 பேருக்கு இலவச கண் பரிசோதனை”