அதிரை கடற்கரைத்தெரு குடிநீர் தேக்கத்தொட்டிக்கு இடம் ரெடி... (படங்கள் இணைப்பு)
Posted November 23, 2014 by Adiraivanavil in Labels: கடற்கரை தெரு
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜாவியா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிரைக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களிடம் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை தெரு தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தை குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி
இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் கோரிக்கை மனு அளித்து இருந்தார்
இதனைத்தொடர்ந்து இன்று தஞ்சையிலிருந்து தமிழ்நாடு வக்ப் வாரிய கண்காணிப்பாளர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்வதற்காக வருகை தந்திருந்தார்.அவரிடம் கடற்கரைத்தெரு ஜமார்த்தார்கள் M.L.A.ஹசன் மற்றும் 8 வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேனா முனா என்கிற ஹாஜா முகைதீன் உள்ளிட்டோர் இடத்தை அடையாளர் காட்டினர் அந்த இடத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி கட்ட நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
0 comment(s) to... “அதிரை கடற்கரைத்தெரு குடிநீர் தேக்கத்தொட்டிக்கு இடம் ரெடி... (படங்கள் இணைப்பு)”