பட்டுக்கோட்டையில் நகராட்சி பணியாளர்கள் தண்டோரா போட்டு தீவிர வசூல்

Posted November 17, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அச்சயாவின் உத்தரவின்படி நகராட்சிக்கு பொதுமக்கள் மூலம் செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு வரிகள் தீவிரமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அதிகப்படியான நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்களுக்கு அவர்கள் சொத்துக்கள் முன்பாக நகராட்சி வரு வாய் ஆய்வர் ராகவேந்திரன் சம்பந்தப்பட்ட வருவாய் உதவியாளருடன் சென்று நகராட்சி பணியாளர்களை கொண்டு தண்டோரா போட்டு நோட்டீஸ் வழங்கினார்.
அந்த நோட்டீசில் உங்களுக்கு இவ்வளவு பாக்கித் தொகை உள்ளது. இதை உடனே கட்ட வேண்டும். இல்லையேல் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றிருந்தது. இது குறித்து நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை மொத்தம் ரூ.5 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரம் ஆகும்.
நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு மேற்கண்ட தொகையை வசூல் செய் தால் மட்டுமே அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த முடியும். இதில் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக அதிகப்படியான நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்களுக்கு அவர்கள் சொத்துக்கள் முன்பாக நகராட்சி பணியாளர்களை கொண்டு தண்டோரா போட்டு நோட்டீஸ் வழங்கியுள் ளோம். பாக்கித் தொகையை உடனே கட்ட வேண்டும். கட்ட தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீர் இணைப்பு கட்டணங்கள் கட்ட தவறிய 150 இணைப்புகள் இதுவரை துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்கள் உடனடியாக குடிநீர் கட்டணத்தை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குத்தகை இனங்களை பொறுத்தவரை பிரதிமாதம் உரிய காலக்கெடுவிற்குள் செலுத்த தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் மறுஏலம் விடப்படும் என்றார்.நன்றி தமிழ்முரசு 
பட்டுக்கோட்டையில் நகராட்சி பணியாளர்கள் தண்டோரா போட்டு தீவிர வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நகராட்சி பணியாளர்கள் தண்டோரா போட்டு தீவிர வசூல்”