முத்துப்பேட்டையில் வங்கி பெண் ஊழியரை தாக்கியவருக்கு வலை

Posted November 18, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரியா(25). இவர் முத்துப்பேட்டையில் உள்ள அரசு வங்கி ஊழிய. இந் நிலையில் இவர் வீட்டருகில் குடியிருக்கும் விஜய் ராஜ் (30)என்பவர் அவரது வங்கிப்புத்தகத்தை பிரியாவிடம் கொடுத்து கணக்கு பதிவு செய்து தரும்படி கூறினார். இதை பெற்றுக்கொண்ட பிரியா பல நாட் கள் ஆகியும் கணக்கு பதிவு செய்து தரவில்லை. இத னால் ஆத்திரம் அடைந்த விஜய் ராஜ் பிரியா வீட்டு க்கு சென்று தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரி யா வை விஜய் ராஜ் சரமாரி யாக தாக்கினார்.
இதில் தலையில் காயமடைந்த பிரியா முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். இது குறித்து முத்துப்பேட்டை எஸ்ஐ செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விஜய்ராஜை தேடி வருகிறார் நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் வங்கி பெண் ஊழியரை தாக்கியவருக்கு வலை”