skip to main |
skip to sidebar
Posted November 22, 2014
by
Adiraivanavil
in
Labels:
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை,விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டை எம்.எல்.எ. என்.ஆர். ரங்கராஜன்(வாசன் கட்சி) தலைமையில் இன்று 500 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் இன்று காலை 10 மணிக்கு ரங்கராஜன் மற்றும் விவசாயிகள் திரண்டு, �கர்நாடக அரசே கர்நாடக அரசே தமிழகத்தை ஏமாற்றாதே, மத்திய அரசே மத்திய அரசே கர்நாடகம் மீது நடவடிக்கை எடு� என முழக்கமிட்டனர்.போராட்டத்தையொட்டி இன்று பட்டுக்கோட்டையில்அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் குறைவாகவே இருந்தது.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் விவசாயிகள் ரங்கராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நன்றி தமிழ்முரசு