
அதிரை அருகே கார் மோதி தச்சுத் தொழிலாளி பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் ராஜாமணி (63). தச்சுத் தொழிலாளி. இவர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா என்ற இடத்தில் தங்கியிருந்து தச்சுவேலை செய்து வந்தார். நேற்று வெளியில் சென்றிருந்தவர் காலை 11 மணியளவில் தான் தங்கியிருக்கம் இடத்திற்கு செல்வதற்காக
கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக ராமேஸ்வரத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார் ராஜாமணி மீது மோதியது.இதில் ராஜாமணி பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி தினகரன்