அதிரை காவல் நிலையத்தில் நகைக்கடை மற்றும் அடகுகடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு உத்தரவு(படங்கள்இணைப்பு)
Posted November 20, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டுகள் அதிகமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக அடகுகடைகளை மையப்படுத்தி திருட்டுகள் நடைபெற்று வருகிறது இதனைத்தொடர்நது கடந்த மாதம் அடகு கடை உரிமையாளர்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி காவல்துறையிடம் உத்தரவிட்டனர் அதனைத்தொடர்ந்து அனேக கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் அனைவருக்கும் அதிரை காவல் துறை சார்பில்
அழைப்பு விடுக்கப்பட்டு காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது அதில் கண்காணிப்பு கேமராவின் அவசியம் பற்றி பேசப்பட்டது அனைத்து அடகுக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும் என உத்தவிட்டனர். இதில் அதிரை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடகுகடை உரிமையாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.தொகுப்பு அதிரைவானவில்0 comment(s) to... “அதிரை காவல் நிலையத்தில் நகைக்கடை மற்றும் அடகுகடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு உத்தரவு(படங்கள்இணைப்பு)”