அதிரையில் மழையால் மீனவர்கள் தொழில் பாதிப்பு தற்போது நிலவரம்– படங்கள்இணைப்பு
Posted November 28, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தொடர்ந்து பலத்த சூரைக்காற்று மற்றும் மழை பெய்து வருவதால் பொரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தஞ்சைமாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் மற்றும் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான 34 மீன்பிடித்தளங்கள் உள்ளன. இதன் மூலம் 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள்
மீன்பிடித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் முதல் அதிரை கடல்பகுதியில் மழையும் பலத்த சூறைக்காற்று வீசிவருகின்றது; இதுபற்றி அதிராம்பட்டினம் மீனவர்கள்; கூறுகையில் கடலில் தற்போது மழை காற்று பலமாக வீசுகிறது இதனால் படகை கடலுக்குள் செழுத்தமுடியவில்லை அலைகள் 8 அடி உயரத்துக்கு எழுவதால் கடகு கவிழ்ந்து விடும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்செல்லவில்லை என்றார்கள்.0 comment(s) to... “அதிரையில் மழையால் மீனவர்கள் தொழில் பாதிப்பு தற்போது நிலவரம்– படங்கள்இணைப்பு”