அதிரையில் 3,4, வார்டுகளில் தெருவிளக்குகள் எரியவில்லை- வெளியில் செல்ல மக்கள் அச்சம்

Posted November 14, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் சுப்பரமணியன்கோவில் தெருவில் 3வதுவார்டு 4வதுவார்டு ஆகிய பகுதிகளில் இன்று இரவு தெருவிளக்குகள்  எரியவில்லை ,இதனால், இரவு நேரங்களில் தெருக்கள் இருள்சூழ்ந்து காணப்படுகிறது , இரவு நேரத்தில், மெயின் ரோட்டில் இருந்து, பஸ்சில் இறங்கி, வருவதற்குள், பொதுமக்கள் படாதபாடுபடுகின்றனர். குண்டும்
குழியுமாக உள்ள ரோட்டில், வாகனத்தில் செல்வோர், விபத்தில் சிக்குகின்றனர். . அதனால், அவர்கள் அச்சமடைகின்றனர். தெருவிளக்கு பழுதாகிவிட்டதாக புகார் கூறினாலும், அது சரிசெய்யப்படுவது கிடையாது. செல்லும் பாதையில் உள்ள, பழுதான மின் விளக்குகளை, உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். இதனால், குண்டும், குழியுமான ரோட்டில், இரவில் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குவதை தவிர்க்கலாம். திருட்டு பயமின்றி பொதுமக்கள் நிம்மதியாக இருக்கலாம்,'


0 comment(s) to... “அதிரையில் 3,4, வார்டுகளில் தெருவிளக்குகள் எரியவில்லை- வெளியில் செல்ல மக்கள் அச்சம்”