நீங்கள் விமானத்தில்பறக்கனுமா:ரூ. 380 இருந்தால் போதும் -airasia வின் சிறப்பு சலுகை..!

Posted November 14, 2014 by Adiraivanavil in Labels:

இந்தியாவில் விமான சேவையில் மக்களை ஈர்க்கும் பொருட்டு இந்தியாவின் பட்ஜட் விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் குறுகிய கால சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன.இந்தியாவின் பட்ஜட் நிறுவனமான இண்டிகோ (IndiGo) விமான
நிறுவனம், குறுகிய கால சிறப்பு சலுகையாக குறைந்தபட்சம் 1,647(வரிகள் உட்பட) ரூபாய் முதல் விமான சேவையை வழங்கியுள்ளது.
இந்த சிறப்பு டிக்கெட்டுகள் பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது இண்ட்கோ. இதே போல் டொமஸ்டிக் பட்ஜெட் ஏர்லைன்ஸான ஸ்பைஸ் ஜெட்(SpiceJet) நிறுவனமும் குறுகிய கால சலுகையை அறிவித்துள்ளது.
இதனி தொடர்ந்து மலேசிய நிறுவனமான, ஏர்ஏசியா(AirAsia) வும் குறைந்த பட்சம் ரூ. 380 (வரிகள் உட்பட) க்கு சிறப்பு சலுகைகளை ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகை ஜூன் 10, 2015 முதல் ஜனவரி 17, 2016ற்கிடையிலான பயணத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இதற்கான புக்கிங் இந்த மாதம் 16ம் தேதி வரை மட்டுமே செய்யப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் பிரபல விமான நிறுவனமான ஜெட் ஏர்வேசும் (Jet Airways) சிறப்பு சலுகை திட்டங்களை வழங்கியுள்ளது. இந்நிறுவனம், குறிப்பிட்ட இடங்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 1,973 முதல் டிக்கெட் செலவை குறைத்துள்ளது.


0 comment(s) to... “நீங்கள் விமானத்தில்பறக்கனுமா:ரூ. 380 இருந்தால் போதும் -airasia வின் சிறப்பு சலுகை..!”