புனித நகரங்களான மக்காவும், மதீனாவும் அதிவேக ரயில் மூலம் ஜித்தா, ராபிஹ் வழியாக இணைப்பு.
Posted November 21, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
புனித நகரங்களான மக்காவும், மதீனாவும் அதிவேக ரயில் மூலம் ஜித்தா, ராபிஹ் வழியாக இணைக்கப் படும்.மக்கா, மதினா இடையே தினமும் இரண்டு ரயில்களும், மக்கா, ராபிஹ் இடையே தினமும் நான்கு ரயில்களும் 450 கிலோ மீட்டர் ரயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப் படும். இதில் மணிக்கு 19,600 பேர் பயணிக்க இயலும்.
ஜித்தாவில் இரண்டு இடங்களிலும், மக்கா, மதினா, ராபிஹ் ஆகிய இடங்களில் ஒன்று வீதமும், அதி நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப் படுகின்றன.
80 சதவிகித கட்டுமான வேலைகள் முடிவடைந்து விட்டதாகவும், இன்ஷா அல்லாஹ் 2015 இறுதியில் மதினா ராபிஹ் இடையே ரயில் சேவை தொடங்கப் படலாம் எனவும் கூறப் படுகிறது.
0 comment(s) to... “புனித நகரங்களான மக்காவும், மதீனாவும் அதிவேக ரயில் மூலம் ஜித்தா, ராபிஹ் வழியாக இணைப்பு.”