அதிராம்பட்டினம் பகுதியில் சங்கு வரத்து அதிகரிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி
Posted November 12, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், நவ. 12:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சங்கு வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து பைபர் படகில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். மீன்கள் மற்றும் இறால் நண்டுகளை பிடிப்பதற்கு கடலில் விரிக்கும் வலையில் சங்குகளும் அதிகமாக அகப்படுகிறது. அந்த சங்கிலிருந்து கறியை எடுத்து கொண்டு சங்கை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். மீனவர்களிடம் வாங்கும் சங்கை ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். அங்கு சங்கிலிருந்து பலவகை அழகு பொருட்கள் செய்கின்றனர்.இதுகுறித்து மீனவர் சங்கர் கூறுகையில், மீனவர்கள் வலையில் 5 சங்கிலிருந்து 10 சங்கு வரை அகப்படுகிறது. இப்போது பெரிய வகை சங்குகள் அகப்படுகிறது. 1 சங்கு ரூ.5க்கு விற்பனை செய்கின்றனர். சங்கு கறியில் மருத்துவ குணம் உள்ளதால் மீனவர்களிடமிருந்து சித்த வைத்தியர்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.நன்றி தினகரன் 0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில் சங்கு வரத்து அதிகரிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி”

