பட்டுக்கோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற கல்வி அதிகாரி --பெற்றோர் மகிழ்ச்சி
Posted November 14, 2014 by Adiraivanavil in
பட்டுக்கோட்டை, : பட்டுக்கோட்டை பகுதி 10, 12ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு கல்வி அதிகாரிகள் சென்று தேர்வுக்கு படிப்பது குறித்து கேட்டறிந்தனர்.
2014- 15ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலத்தெரு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் இல்லங்களுக்கு தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட கல்வி அலுவலர்கள் பட்டுக்கோட்டை வளர்மதி, தஞ்சாவூர் ரங்கநாதன், கும்ப கோணம் அண்ணாத்துரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். அப்போது இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்கும் விவரங்களை கேட்டறிந்தனர்.
மாணவர்கள் படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டு கொண்டார். பெற்றோர் அனைவரும் வரவேற்று தங்கள் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
சாந்தாங்காடு, பள்ளிவாசல் தெரு, கண்டியன்தெரு, அந்தோணியார்கோயில் தெரு, அண் ணாநகர் போன்ற இடங்களுக்கும், பிற்பட்டோர் நல மாணவர்கள் விடுதிக்கும் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து பெற்றோருக்கும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு நன்றி கூறினார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற கல்வி அதிகாரி --பெற்றோர் மகிழ்ச்சி”


