தாயகத்திலிருந்து சவூதி அரேபியா வரும் சொந்தங்களின் கவனத்திற்கு

Posted November 14, 2014 by Adiraivanavil in

ஏற்கனவே பல முறை பதிவு செய்த தகவல்கள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் தவறுகள் நடப்பதால் மீண்டும் நினைவூட்டல். 

கடந்த 2 வாரங்களுக்கு முன் கடையநல்லூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் கொண்டு வந்ததால் அவரை சவூதி சுங்கத்துறையினர் கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விட்டனர்.

சம்பந்தப்பட்ட சகோதரரின் உறவினர் நம்மை தொடர்பு கொண்டார்கள் அதன் பின் தூதரகத்தின் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன.

கொண்டு வந்த மாத்திரைகள் அனைத்தும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தன ஆனாலும் கைது - வழக்கு - சிறை...

சகோதரர்களே! அயல்நாட்டிலிருந்து சவூதி வரும் சகோதரர்கள் தேவைக்கு அதிகமாக அதாவது 15 நாட்களுக்கு மேல் மருந்துகள் கொண்டு வர தடை செய்யப்பட்டள்ளன.

காரணம், இடம் சூழ்நிலை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்கள், தட்ப வெட்ப பருவநிலை மாற்றங்கள் மனச் சுமை மற்றும் பணிச் சுமை காரணமாக உடல் நிலை மாற்றங்கள் இதன் காரணமாக அந்தந்த நோய்களுக்கு அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் பரிசோதனை 

செய்து மருந்து உட்கொள்வது சிறந்தது என்ற காரணத்தினாலும், நம் நாட்டில் தயாரிக்கும் சில மருந்துகளில் போதை மற்றும் தூக்கம் போன்றவைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதாலும் தடை செய்யப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் நமக்குத் தெரிய கொத்துக் கொத்தாக நம் சகோதரர்கள் பல மாதங்களுக்குத் தேவையான மாத்திரைகளை வாங்கிவரப் பார்த்துள்ளோம்.

மொத்தமாக மாத்திரைகள் கொண்டு வர இந்த நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக எந்த மாத்திரைகளும் வாங்கி வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

நன்றி

ஹூஸைன்கனி,
தமுமுக - ரியாத்


0 comment(s) to... “தாயகத்திலிருந்து சவூதி அரேபியா வரும் சொந்தங்களின் கவனத்திற்கு”