அதிரை கடல் பகுதியில்அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரிப்பு

Posted November 26, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் துறைமுக பகுதிகளிலிருந்து பைபர் படகில் மீனவர்கள் மீன், இறால், நண்டு பிடிப்பதற்கு செல்கின்றனர்.இப்போது மீன்பிடி சீசன் துவங்கி உள்ளதால் அதிகளவில் வெள்ளை இறால்கள் பிடிப்பட்டு வருகிறது. அதோடு நேற்று அட்டை சிங்கி இறால்களும் அகப்பட்டுள்ளன. அட்டை சிங்கி நமது கடல் பகுதியில் அகப்படுவது அரிதாகும்.
இதுகுறித்து மீனவர் நூர்தீன் கூறுகையில், அட்டை சிங்கி இறால், கலர் சிங்கி இறால்கள் எப்போதும் பிடிபடாது. மழை காலத்தில் மட்டும் பிடிபடும். இப்போது அட்டை சிங்கி இறால்கள் அகப்படுகிறது. 1 கிலோ ரூ.600க்கு விற்பனையாகிறது. இந்த சிங்கி இறால் பாற்கடல் பகுதியில் அதிகளவில் அகப்படும். கடல் நீரோட்ட தன்மையால் நமது கடற்பகுதியில் அகப்படுகிறது என்றார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை கடல் பகுதியில்அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரிப்பு”