முத்துப்பேட்டையில் விவசாயிகள் நடத்தும் மறியல் போராட்டத்துக்கு மாற்று திறனாளிகள் சங்கம் ஆதரவு

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
டெல்டாவில் வரும் 29ம் தேதி விவசாயிகள் நடத்தும் மறியல் போராட்டத்துக்கு மாற்று திறனாளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பாலசுப்பிரமணி யன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு முயற்சி செய்து வரு கிறது. இதனை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பது வேத னைக்கு உரிய விஷயம். டெல்டா பகுதியை பாலைவனமாக்க நினைக்கும் கர் நாடக அரசின் இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக முதல்வர் இதனை தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலா ண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை மத் திய அரசு உடன் அமைத் திட வேண்டும். இதனை கண்டித்து டெல்டா விவசாயிகள் சார்பில் வருகிற 29ம் தேதி நடத்தும் மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. அந்த போராட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அவசியம் கலந்து கொள்வார்கள். மேலும் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை எங்கள் அமைப்பு நேரடியாக போராட்டம் நடத்தும் என் றார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் விவசாயிகள் நடத்தும் மறியல் போராட்டத்துக்கு மாற்று திறனாளிகள் சங்கம் ஆதரவு”