முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது
Posted November 14, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, நவ. 14:முத்துப்பேட்டை அருகே நேற்று வாய்க்காலில் கார் பாய்ந்தது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்று ஒரு கார் சென்றது. காரை நாகூர்பிச்சை என்பவர் ஓட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வாய்க்காலில் பாய்ந்தது. கார் டிரைவர் நாகூர்பிச்சை கதவை திறந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் வாய்க்காலில் பாய்ந்த சிறிது நேரம் அதன்
முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சென்று காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.நன்றி தினகரன்
முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சென்று காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது”