பட்டுக்கோட்டை பகுதி நெடுஞ்சாலைகளில் தரைக்கடைகள் அமைக்க தடை

Posted November 13, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பகுதி நெடுஞ்சாலைகளில் தரைக்கடைகள் போடுவதற்கு தடை விதித்து ஆர்டிஓ தலைமையில் நடந்த ஆலோசனை  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைக்கு உட் பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை காலி செய்தல் தொடர்பான ஆலோ  சனை கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ அரங்கநாதன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு  வரை உள்ள தரைக்கடை மற்றும் தட்டுவண்டி கடைகள் 20 கடைகளை உழவர் சந்தைக்கு மாற்றம் செய்வது. 20 கடைகள் நாடிமுத்து நகர்  ஆர்ச்சிலிருந்து யூனியன் ஆபிஸ் வரை நகராட்சிக்கு சொந்தமான வடிகாலின் மேல்பகுதியில் சிலாப் மேலே வைத்து கொள்வது. மீதமுள்ள 15  கடைகள் எந்த இடத்தில் வைப்பது என்பது குறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் பார்வையிட்டு தகவல் தெரிவிக்க வேண் டும்.  தரைக்கடைகள் நெடுஞ்சாலைகளில் போட முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

கூட்டத்தில் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தீபாகாணிகேர், நகராட்சி ஆணையர் அச்சயா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட  பொறியாளர் சரவணன், தாசில்தார் பாஸ்கரன், நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, நகராட்சி பொறியாளர் ரங்கராசு, நகரமைப்பு அலுவலர் ராமலிங்கம்,  ஆய்வாளர் கருப்பையன், சாலை ஆய்வாளர் சுரேஷ், வருவாய் ஆய்வர் கார்த்திகேயன், விஏஓக்கள் மகாராஜசமுத்திரம் பொன்னு துரை,  நாடியம்பாள்புரம் ராஜசேகர், பட்டுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்)  பிரபாகரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், போக்குவரத்து பிரிவு எஸ்ஐ அபுதுல்லா, நகர வர்த்தக சங்க செயலாளர் தன்ராஜ், பொருளாளர்  ராமதாஸ் மற்றும் தரைக்கடை, தட்டுவண்டி வியாபாரிகள் பங்கேற்றனர். 

கூட்ட முடிவில் ஆர்டிஓ அரங்கநாதன் கூறுகையில், நெடுஞ்சாலை ஓரங்களிலிருந்து அகற்றப்பட்ட கடைக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  இடங்களிலிருந்து வியாபாரம் செய்யவும், பொதுமக்கள் அந்த இடங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையானவையை பெற்று செல்லுமாறு கேட்டு  கொள்ளப்படுகின்றனர் என்றார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பகுதி நெடுஞ்சாலைகளில் தரைக்கடைகள் அமைக்க தடை”