பேராவூரணி பகுதியில் குவாரிகள் அமைத்து கொடுத்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்
Posted November 11, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை, : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஏஐடியுசி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலை வர் பாலசுந்தரம் தலைமை யில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந் தன், செயலாளர் சேகர், பொருளாளர் வைத்தி, சிபிஐ பேராவூரணி ஒன்றிய செய லாளர் காசிநாதன், ஏஐடியுசி பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் முருகேசன் மற்றும் ஏராளமான மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை காவல் துறை உதவி கண்காணிப் பாளர் டாக்டர் தீபாகாணிகேரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை இல்லை என அரசே அறிவித்த பின் னும் காவல்துறை மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வண்டி ஓட்டுபவரை தாக்குகிறார்கள். இது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இனிமேல் காவல்துறையினர் மாட்டு வண்டி ஓட்டுபவர்களை தாக்கக்கூடாது. பேராவூரணி சட்டமன்ற பகுதி முழுவதும் மாட்டுவண்டி தொழிலாளர் களாகிய நாங்கள் மிகவும் ஏழைகளாக உள்ளோம். கடைமடை பகுதியான இங்கு பிழைக்க வழியின்றி இருக்கும் சிறு நிலங்களையும் விற்று மாட்டு வண்டி வாங்கி பிழைத்து வருகி றோம். “
இந்த நிலையில் மணல் குவாரிகள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி மணல் அள்ள அனுமதிக்க வேண்டுகிறோம். விளங்குளம் அம்புலியாறு, திருச்சிற்றம்பலம் அக்னியாறு ஆகிய இடங்களில் குவாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதே கோரிக்கையை தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து ஏஐடியுசி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் பாலசுந்தரம் கூறுகையில்,
மாட்டு வண்டி தொழிலாளர்கள் இதையே நம்பி கடைமடை பகுதியான இங்கு தண்ணீர் வராத இந்த நேரத்தில் இருக்கிற குறை வான நிலங்களையும் விற்று மாட்டு வண்டி வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்துகிற நாங்கள் மிகவும் சாதாரண ஏழைத் தொழிலாளர்கள். மாட்டு வண்டி யையே நம்பியிருக்கிற எங்களை தற்போது காவல் துறை மணல் அள்ளக்கூடாது என்று கூறி வண்டி ஓட்டுபவர்களை தாக்குகிறார்கள். எங்களுக்கு மணல் குவாரி அமைத்துக் கொடுத் தால் உரிய கட்டணத்தை செலுத்தி மணல் அள்ள தயாராக இருக்கின்றோம். ஏழை மக்கள் நாங்கள் பிழைக்க வேண்டும் என்று காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் கூறினோம். அவர்களும் மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார். நன்றி தினகரன்
0 comment(s) to... “பேராவூரணி பகுதியில் குவாரிகள் அமைத்து கொடுத்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்”


