முத்துப்பேட்டை பகுதியில் தொடரும் திருட்டால் பொது மக்கள் பீதி
Posted November 13, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, நவ. 13:
முத்துப்பேட்டையில் அடிக்கடி திருட்டு நடப்பதால், மக்கள் பீதியில் உள்ளனர்.முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த நகரமாகும். அதனால் நகரில் இரவும், பகலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனாலும் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.கடந்த 2ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் லாரி டிரைவரை தாக்கி மர்ம நபர்கள் பணம் பறித்தது, 5ம் தேதி அதிமுக பிரமுகர் வீட்டு நிறுத்தி வைத்திருந்த பைக் திருட்டு, 6ம் தேதி ஜாம்புவானோடை தர்காவில் மயக்க மருந்து கொடுத்து கேரள தம்பதியிடம் பணம்
திருட்டு, 8ம் தேதி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் ஒரு கடையில் பட்டப்பகலில் ரூ. 33 ஆயிரம் கொள்ளை, 10ம் தேதி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கணேசன் என்பவரது ஹோட்டலில் புரோட்டா கல் திருட்டு நடந்தது.
இப்படி அடிக்கடி திருட்டு நடப்பதால், மக்கள் பீதியில் உள்ளனர். அதேபோல் சமீப காலமாக நகரில் சுற்றித்திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை ஒரு கும்பல் அடிக்கடி திருடி லாரிகளில் கடத்திவரும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நன்றி தினகரன் திருட்டு, 8ம் தேதி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் ஒரு கடையில் பட்டப்பகலில் ரூ. 33 ஆயிரம் கொள்ளை, 10ம் தேதி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கணேசன் என்பவரது ஹோட்டலில் புரோட்டா கல் திருட்டு நடந்தது.
0 comment(s) to... “முத்துப்பேட்டை பகுதியில் தொடரும் திருட்டால் பொது மக்கள் பீதி”


