அதிரையில்2வது நாளக மழை நீடிப்பு அதிரையில்-4.4மில்லிமீட்டர் பதிவு

Posted November 13, 2014 by Adiraivanavil in Labels:

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்றுகாலை 9.30 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை 15 நிமிடம் நீடித்தது. அதன்பின்னர் சிறிது நேரம் மழை தூறிக் கொண்டே இருந்தது. பின்னர் மழை நின்றாலும் வெயில் அடிக்காமல் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பிற்பகல் சிறிது நேரம் லேசாக மழை தூறியது.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 21.2 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக குருங்குளத்தில் 1 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 660 எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம்-4.4, கும்பகோணம்-7, பாபநாசம்-7.6, தஞ்சை-3.6, திருவையாறு-7, திருக்காட்டுப்பள்ளி-3.3, கல்லணை-1.4, அய்யம்பேட்டை-8, திருவிடைமருதூர்-11.2, மஞ்சலாறு-10.2, பூதலூர்-9, ஈச்சன்விடுதி-4.2, மதுக்கூர்-2.8, பட்டுக்கோட்டை-5, பேராவூரணி-2, அணைக்கரை-21.2, குருங்குளம்-1.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 108.9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சராசரி மழைஅளவு 5.19 மி.மீட்டர் ஆகும். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 610.44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு 549.11 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் கூடுதல் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி தினத் தந்தி 


0 comment(s) to... “அதிரையில்2வது நாளக மழை நீடிப்பு அதிரையில்-4.4மில்லிமீட்டர் பதிவு”