அதிரையில்வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Posted November 12, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஊதிய உயர்வு குறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஒரு நாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இதை அறிவித்து உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் 10 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள்.சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினை என்பதால், தேசிய
உடமையான வங்கிகளின் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்கின்றனர். எனவே வங்கி பண பரிவர்த்தனை அனைத்தும் பாதிக்கப்படும். மற்ற சேவைகளும் முடங்கும் அபாயம் உள்ளது.இதையடுத்து வங்கி ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஒரு நாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இதை அறிவித்து உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் 10 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள்.சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினை என்பதால், தேசிய
இதனால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடைபெறாது. வங்கி அலுவலக ரீதியான பணிகளும் நடக்காது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசு உடமை வங்கிகள் எதுவும் இன்று இயங்காது என்றாலும், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி வெங்கடாசலம் தலைமை தாங்குகிறார். இதுபோல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:–
வங்கி ஊழியர்கள் 25 சதவீத ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வங்கி நிர்வாகம் அதை ஏற்கவில்லை. 23 சதவீதம் பெற சம்மதித்தோம். ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) 11 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூறிவிட்டது. எனவே வேறு வழியின்றி ஏற்கனவே அறிவித்த படி நாளை (இன்று) வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
அகில இந்திய அளவில் 10 லட்சம் ஊழியர்களும், தமிழ்நாட்டில் 65 ஆயிரம் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகள் நாளை இயங்காது. தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரம் வங்கி கிளைகளில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். இதையொட்டி நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்நன்றி தினபூமி
0 comment(s) to... “அதிரையில்வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்”


