முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted December 15, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. தலைவர் வேதசங்கர் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர்களால் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 22 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் திருமணி மகாலிங்கம், கண் சிகிச்சை சேர்மன் தாவுது, முன்னாள் பொருளாளர் நடராஜ் சுந்தரம், முன்னாள் தலைவர்கள் ராமமூர்த்தி, கணேஷ் மாணிக்கம், முன்னாள் செயலாளர் ராமலிங்கம் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் சபாபதி, கண்ணதாசன் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்”