முத்துப்பேட்டை அருகே பரபரப்பு காவல் நிலையம் முன் கம்யூனிஸ்ட் மறியல்-டிஜிட்டல் பேனர் சேதம்
Posted December 28, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், விஜி, தீபன், ஜெயபிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எடையூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், நிர்வாகிகள் ஜோதி பாசு, வக்கீல் சிவசாகர், செல்லத்துரை, செல்லையன், வீரமணி ஆகியோரது தலைமையில் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜன் வந்தார். அவர்களிடம் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், இன்ஸ்பெக்டர் முருகன், சப்இன்ஸ்பெக்டர் ஞானப்பண்டிதர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி 2 தினங்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி &முத்துப்பேட்டை வழித்தடத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது

.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பரபரப்பு காவல் நிலையம் முன் கம்யூனிஸ்ட் மறியல்-டிஜிட்டல் பேனர் சேதம்”